மக்கள் நீதி மய்யம் சார்பில் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுவை ரூ.50,000 செலுத்தி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம், பேரவைத் தேர்தலில் அக்கட்சியிடம் இரட்டை இலக்க தொகுதிகளைக் கேட்டுப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளன. திமுக தலைமையில் இந்தியா கூட்டணியும், அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சித் தனித்தும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் பொதுச்செயலர் அருணாச்சலம் உள்ளிட்ட ஐவர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அக்கட்சி அமைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.