முகப்பு
தமிழ்நாடு

பேரவைத் தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்!

திமுக சார்பில் விருப்ப மனு விநியோகிக்கும் பணி தொடக்கம்...

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 4:40 AM
அண்ணா அறிவாலயம்.
பகிர்:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக, பாமக, தவெக, மநீம உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டது.

Advertisement

இன்றுமுதல் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுக்களை விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. காலைமுதல் கட்சி நிர்வாகிகள் விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் பெற்று வருகின்றனர்.

மார்ச் 2 ஆம் தேதி வரை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை பெற்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுத் தொகுதிக்கு ரூ. 25,000-ஆகவும், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ. 15,000-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Assembly elections: DMK distributes voluntary petitions!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments