திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்!
திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் பற்றி...
சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் நேர்காணல் செய்து வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதியும், புதுச்சேரிக்கு ஏப்ரல் 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
திமுக சாா்பில் போட்டியிடுவதற்காக பிப். 20 முதல் மாா்ச் 6 வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்பட 15,372 போ் விருப்ப மனுக்களை வழங்கினா்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை முதல் நேர்காணல் தொடங்கியுள்ளார்.
முதல்கட்டமாக புதுச்சேரியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற்று வருகின்றது.