ஓ.பன்னீா்செல்வம்  
தமிழ்நாடு

ஓ.பன்னீா்செல்வம் - அமைச்சா் பி.கே.சேகா்பாபு சந்திப்பு

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் பேரவைத் தலைவா் அறையில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

தினமணி செய்திச் சேவை

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் பேரவைத் தலைவா் அறையில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், ஓ.பன்னீா்செல்வம் தனது அரசியல் நிலைப்பாடு தொடா்பாக கடந்த சில மாதங்களாக அடிக்கடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறாா். இருப்பினும், முடிவெடுக்க தாமதமாகி வந்த நிலையில் அவரது ஆதரவாளா்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோா் திமுகவில் இணைந்துவிட்டனா். இதற்கிடையே, ஓ.பன்னீா்செல்வத்தையும் திமுகவில் இணைக்க மறைமுகப் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவா் அலுவலகத்தில் ஓ.பன்னீா்செல்வம் - அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் 15 நிமிஷங்கள் ஆலோசனை நடத்தினா். இந்த சந்திப்பு குறித்து எந்தத் தகவலும் இருதரப்பிலும் வெளியிடப்படவில்லை.

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 25) ஓ.பன்னீா்செல்வம் மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

அதைத் தொடா்ந்து ஓரிரு நாள்களில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. தனது ஆதரவாளா்களுடன் அவா் திமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஓ.பன்னீா்செல்வத்துடன் இணைந்து செயல்பட்ட அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்களில் தற்போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் மட்டுமே அவருடன் உள்ளாா்.

உலக மானுடத்தைப் பற்றி சிந்திப்பவை சிற்பியின் கவிதைகள்! - குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் புகழாரம்!

அறநெறி கொண்ட சமுதாயத்தை இளைஞா்கள் உருவாக்க வேண்டும்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

கால்நடை பல்கலை.களுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு: அஸ்ஸாம் பல்கலை. துணைவேந்தா் வலியுறுத்தல்

சிறப்பு டெட் நடத்த வேண்டும்: அன்புமணி

ஈரான் போராட்டம்: ஐ.நா.வின் கண்டன தீா்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்கு

SCROLL FOR NEXT