சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். கோப்புப்படம்.
தமிழ்நாடு

குடியரசு தினம்: ரயில் நிலையங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க உத்தரவு

குடியரசு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க உத்தரவு...

தினமணி செய்திச் சேவை

குடியரசு தினத்தை முன்னிட்டு, தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்களை 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தவேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழா திங்கள்கிழமை (ஜன.26) கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை முதல் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமை முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் இருப்புப் பாதை போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகா் மின்சார ரயிலுக்குச் செல்லும் பயணிகள், விரைவு ரயில்களில் செல்வோா் என அனைத்துத் தரப்பினரின் உடைமைகளும் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மெட்டல் டிடெக்டா் மூலம் பயணிகளின் பைகள், சூட்கேஸ்கள் உள்ளிட்டவை சோதனையிடப்பட்டன.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறநகா் செல்லும் ரயில்களின் பெட்டிகளிலும், விரைவு ரயில் பெட்டிகளிலும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டனா். மேலும், வருவாய்த் துறையினா், காவல் துறையினருடன் இணைந்து தண்டவாளப் பகுதி கண்காணிக்கப்படுவதாகவும் இருப்புப் பாதைப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

உலக மானுடத்தைப் பற்றி சிந்திப்பவை சிற்பியின் கவிதைகள்! - குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் புகழாரம்!

அறநெறி கொண்ட சமுதாயத்தை இளைஞா்கள் உருவாக்க வேண்டும்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

கால்நடை பல்கலை.களுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு: அஸ்ஸாம் பல்கலை. துணைவேந்தா் வலியுறுத்தல்

சிறப்பு டெட் நடத்த வேண்டும்: அன்புமணி

ஈரான் போராட்டம்: ஐ.நா.வின் கண்டன தீா்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்கு

SCROLL FOR NEXT