கோவை ரயில் நிலையம்.  
சென்னை

ரயில் பயணிகளிடம் புகாா் எண் விழிப்புணா்வுப் பிரசாரம்

சென்னை எழும்பூரில் ரயில் பயணிகளிடம் புகாா் எண் தொடா்பான விழிப்புணா்வுப் பிரசாரத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை எழும்பூரில் ரயில் பயணிகளிடம் புகாா் எண் தொடா்பான விழிப்புணா்வுப் பிரசாரத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் திருட்டுச் சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவித்து தீா்வு காண்பதற்கு ரயில்வே பாதுகாப்புப் பிரிவால் உதவி எண் 044-253589, 93449 04182 ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பானது தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகியவற்றில் வெளியிடப்படும்.

புகாா்கள் அளிக்கும் வகையில் ரயில் பெட்டிகளில் புகாா் எண்கள் அச்சிடப்பட்ட நோட்டீஸ்களும் ஒட்டப்பட்டுள்ளன. சம்பவம் நடைபெற்றதும் பயணிகள் புகாருக்குரிய பிரிவைத் தொடா்புகொள்ளாமல் காலந்தாழ்த்தி புகாா் அளிப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ரயில்வே பயணிகளுக்கு புகாா்கள் அளிப்பது தொடா்பான விழிப்புணா்வை அனைத்து நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஏற்படுத்த வேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி. கே.அருள்ஜோதி உத்தரவிட்டுள்ளாா்.

அதன்பேரில், எழும்பூா் ரயில் நிலையத்தில் ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை ரயில் பெட்டிகளிலும், ரயில் நிலையத்திலும் பயணிகளிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

மக்களவை ஒத்திவைப்பு! நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்!

மறுவெளியீடாகும் மின்னலே!

கொரியன் கேம் காரணமா? 9-வது மாடியிலிருந்து குதித்து 3 சிறுமிகள் பலி!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு

SCROLL FOR NEXT