சென்னையில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகையில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த தியாகிகள் தாளமுத்து-நடராசன் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்!
1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் - தாளமுத்து ஆகியோருக்கு மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினேன்.
மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன். எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் திருவுருவச் சிலைகளையும் திறந்துவைத்தேன்.
மொழிப்போர்களில் உயிர்ப்பலியான மற்ற தியாகியரையும் இந்நாளில் தமிழுணர்ச்சியோடு நினைவுகூர்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.