இந்தியாவில் முதல்முறையாக சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் (HPV) தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஜன. 27) தொடக்கி வைத்தார்.
தமிழக அரசு சார்பில் 14 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கு இலவசமாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க ரூ.14,000 மதிப்புள்ள இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று, சென்னையில் நடைபெற்று வரும் உலக மகளிர் உச்சி மாநாட்டில் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் 14- வயதுள்ள சிறுமிகளுக்கு ரூ.14,000 மதிப்புள்ள இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 3.39- லட்சம் சிறுமிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக ரூ.36- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்க, கடந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு வயது முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு ஹெச்பிவி எனப்படும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனிடையே ஈரோடு, திருப்பத்தூா், கன்னியாகுமரி, ராணிப்பேட்டையில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு சோதனை முயற்சியில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.