நாமக்கல் சாலப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி  DPS
தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ. 10 லட்சம்: எடப்பாடி பழனிசாமி

நாமக்கல் சாலப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இபிஎஸ் தொடக்கிவைத்தது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நாமக்கல்: அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

நாமக்கல் சாலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போட்டியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

“ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. காளை அடக்கும் வீரர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் அற்புதமான விளையாட்டு ஆகும். கலாச்சார அடையாள விளையாட்டும் கூட. இந்த ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வைப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் எதிர்பாராதவிதமாக காளைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும், போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு செய்து கொடுக்கப்படும். காளைகளுக்கும் காப்பீடு செய்யப்படும்” என்றார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. ஆர். விஜயபாஸ்கர், பி. தங்கமணி, சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Rs. 10 lakh compensation if participants die in Jallikattu: Edappadi Palaniswami

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவரை அவமதித்தாரா ராகுல்? பாஜக குற்றச்சாட்டும், காங்கிரஸ் பதிலும்!

விஜய் தேவரகொண்டா - 14 படத்தின் அறிவிப்பு டீசர்!

மகளிர் விடியல் பயணம்! பிங்க் பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து தொடக்கிவைத்த முதல்வர்!

வெள்ளி கிலோவுக்கு ரூ.12 ஆயிரம் உயர்வு: தங்கம் விலை குறைவு!

வா வாத்தியார் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT