தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி இன்று சந்தித்து பேசவுள்ளார்.
தமிழகம், கேரளம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.
இந்த நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கிட்டத்திட்ட இறுதி செய்யப்பட்டு, பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்கள்.
ஆனால், திமுக கூட்டணியில் கடந்த தேர்தல்களில் அங்கம் வகித்த பிரதான கட்சியான காங்கிரஸ், கூட்டணியைத் தொடருமா? அல்லது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்குச் செல்லுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் நிலவுகிறது.
இதற்கேற்ப காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து திமுகவுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தி வந்த நிலையில், சில நாள்களுக்கு முன்னதாக, தில்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடருக்காக தில்லி சென்றுள்ள கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை இன்று நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொகுதிப் பங்கீடு, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் முதல்கட்ட ஆலோசனைகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.