உலமாக்களுக்கான ஓய்வூதியம் உயர்வு உள்பட பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.
சுவாமிமலையில் புதன்கிழமை(ஜன. 28) நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில மாநாட்டில் முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் :
தமிழக வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்துள்ள உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ. 5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அந்த வகையில், பதிவு செய்துள்ள 1,537 உலமாக்களுக்கு உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ. 5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
உலமாக்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். அந்த வகையில், 44 உறுப்பிர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கோயம்புத்தூரில் புதிதாக வக்ஃபு வாரிய தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
முஸ்லீம்களுக்கான அடக்கஸ்தலம் அமைக்க மாநகராட்சி பகுதிகளில் இடங்கள் அடையாளம் காணப்படும். கல்லறை தோட்டம் கபர்ஸ்தான்கள் இல்லாத இடங்களில், மாநகராட்சி சார்பில் அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டு அமைத்துத் தரப்படும்.
உலமாக்கள் நலவாரியத்தில் உள்ள உலமாக்களில், முதல்கட்டமாக 1,000 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான அரசு மானியத்தொகை ரூ. 50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள உருது மொழி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
முஸ்லீம் மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.