கோப்புப் படம் 
தமிழ்நாடு

தைப்பூசம், வார இறுதி நாள்கள்: 1,205 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தைப்பூசம் மற்றும் வார இறுதி நாள்களையொட்டி 1,205 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தைப்பூசம் மற்றும் வார இறுதி நாள்களையொட்டி 1,205 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வார விடுமுறை நாள்கள் மற்றும் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன. 30, 31, பிப். 1) கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜன. 30) 360 பேருந்துகளும், சனிக்கிழமை 485 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதுபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 60 பேருந்துகளும், சனிக்கிழமை 60 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை 20 பேருந்துகளும், சனிக்கிழமை 20 பேருந்துகளும் என மொத்தம் 1,205 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தவிர, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா

கரூா் சம்பவம்: தவெக பனையூா் அலுவலக உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை

சண்டீகரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மாணவா்கள் வெளியேற்றம்

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் கூச்சல், சலசலப்பு

‘காற்றில் கோட்டை கட்டும் மாநிலங்கள்’: தெருநாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT