தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாஸ் பேசுகையில், “இதுவரையில் 4,109 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். விருப்ப மனு அளிக்கப்பட்டதன் அடிப்படையில், 13 மாவட்டங்களைச் சேர்ந்தோர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது. இன்னும் சில நாள்களும் நேர்காணல் நடத்தப்படும்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை; விரைவில் முடிவை அறிவிப்போம். கூட்டணி தொடர்பாக சிலர் பேசினர்; பேசிக் கொண்டிருக்கிறார்கள்; பேசுவோம்” என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களைப்போல பாமக அதன் வெற்றியைப் பெறுமா என்ற கேள்விக்கு, நம்பிக்கையின் அடிப்படையில்தான் உலகம் இயங்குவதாக ராமதாஸ் பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.