தேசிய மருத்துவர்கள் நாள்: முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து
தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி முதல்வர் ச. ஜோசப் விஜய் சமூக வலைதளங்களில் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது தொடர்பாக...
தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி முதல்வர் ச. ஜோசப் விஜய் சமூக வலைதளங்களில் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் நாளான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
Advertisement
Advertisement
மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது.
மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்னகையையும், அவர்கள் குடும்பத்தில் நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்று, தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட இந்நாளில் வாழ்த்துகிறேன் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
National Doctors' Day: Chief Minister Joseph Vijay extends wishes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.