முகப்பு
தமிழ்நாடு

மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு, மனிதநேயம்..! முதல்வர் விஜய் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி முதல்வர் விஜய் வாழ்த்துப் பதிவு...

Updated On : 1 ஜூலை 2026, 10:19 am IST
முதல்வர் விஜய் (கோப்புப்படம்) - TN Assembly
பகிர்:

தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி, மருத்துவர்கள் அனைவருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

Advertisement

Advertisement

மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது.

மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்னகையையும் அவர்கள் குடும்பத்தில் நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்று தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட இந்நாளில் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

selfless service and dedication of doctors are always worthy of praise: Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments