FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருப்பாச்சி புதிய மறுவெளியீட்டுத் தேதி!

திருப்பாச்சி திரைப்படத்தின் மறுவெளியீடு குறித்து...

19 அக்டோபர் 2026, 2:40 pm IST
திருப்பாச்சி படத்தில் விஜய், த்ரிஷா - கோப்புப்படம்
பகிர்:

முதல்வர் விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படம் விரைவில் மறுவெளியீடாகிறது.

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் முதல்வர் விஜய் நடிப்பில் உருவான திருப்பாச்சி திரைப்படம், கடந்த 2005 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.

திருப்பாச்சியிலிருந்து சென்னைக்குத் திருமணமாகிச் சென்ற தன் தங்கைக்கும், தங்கையின் கணவருக்கும் ரௌடிகளால் பிரச்னை ஏற்பட, அதை தீர்க்கச் செல்லும் அண்ணனாக விஜய் நடித்திருந்தார். நாயகியாக நடிகை த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பசுபதி, மல்லிகா, கோட்டா ஸ்ரீனிவாச ராவ் நடித்திருந்தனர்.

Advertisement

Advertisement

திருப்பாச்சி படத்தில் அண்ணன் தங்கை பாசம் ரசிகர்களை அதிகளவில் ஈர்த்தது. இப்படம் வெளியான போது, தமிழகம் முழுவதும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இப்படம் வருகிற டிச. 25 ஆம் தேதி மறுவெளியீடாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் நடிக்கப்போவதில்லை என அறிவித்ததால் அவரின் பழைய திரைப்படங்களை மறுவெளியீடு செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

The film Thirupachchi starring Chief Minister Vijay is being re-released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments