FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!

முதல்வர் ஜோசப் விஜய்யின் திருச்சூர் பயணம் பற்றி...

50 வினாடிகள் முன்பு
முதல்வர் விஜய் - ANI
பகிர்:

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூருக்கு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே ரூ. 300 கோடியில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பில் ‘பெரியாா் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் புத்தகங்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகள், ஆராய்ச்சி படிப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ‘பெரியாா் அறிவுலகம்’ திறப்பு விழாவில் பங்கேற்று முதல்வர் ஜோசப் விஜய் நாளை திறந்துவைக்கவுள்ளார்.

Advertisement

Advertisement

இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் செல்லும் விஜய், அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் இடத்துக்கு பயணிக்கிறார்.

இந்த விழா முடிந்தவுடன் ஹெலிகாப்டர் மூலம் திருச்சூர் செல்லும் முதல்வர் விஜய், பிரபல தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் நடைபெறும் நவரத்திரி விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயணத்தின் போது குருவாயூர் கோயிலுக்குச் சென்று முதல்வர் விஜய் தரிசனம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கு பயணம் மேற்கொண்ட விஜய், கனக துர்கை அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

summary

Chief Minister Vijay to travel to Thrissur tomorrow!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments