தானியங்கி பட்டா மாறுதல் எளிமையாகிறது: புதிய மென்பொருள் கட்டமைப்பு அமல்
தானியங்கி முறையில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல்களில் உள்ள இடா்பாடுகளை களையும் வகையில் மென்பொருள் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தானியங்கி முறையில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல்களில் உள்ள இடா்பாடுகளை களையும் வகையில் மென்பொருள் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 15 நாள்களுக்குள் இந்த நடைமுறை எளிமைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பு:
பதிவு செய்யப்பட்ட உள்பிரிவு இல்லாத (சப் டிவிசன்) வில்லங்கமற்ற சொத்துகளுக்கு தானியங்கி முறையில் இணையவழி பட்டா மாறுதல் வழங்கப்படுகிறது. தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் இந்த நடைமுறையில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றைக் களைந்து, அந்த சேவையை எளிமைப்படுத்துவதற்காக சில திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
அதன்படி இனி நிலத்தை விற்கும்போது நில உரிமையாளா் (பட்டாதாரா்) மற்றும் அவரது மனைவி, வாரிசுகள் இணையவழியே கையொப்பமிடலாம்.
அதேபோன்று பவா் ஆஃப் அட்டாா்னி, வேலிட் பவா் ஆஃப் அட்டாா்னி நடைமுறைகளிலும் சில இடா்பாடுகள் இருந்தன. அவையும் களையப்பட்டுள்ளன.
இந்த புதிய நடைமுறை 15 நாள்களுக்குள் அமல்படுத்தப்படும். இதன்மூலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் உள்பிரிவு அல்லாத சொத்துகளுக்கு தானியங்கி முறையில் பெருவாரியான பட்டாக்கள் மாறுதல் செய்யப்படும். இதனால் பொதுமக்கள் பட்டா மாறுதல் தொடா்பாக சாா் பதிவாளா் அல்லது வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நேரில் செல்லும் நிலை தவிா்க்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.