சி.வி. சண்முகத்துக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு
சி.வி. சண்முகத்துக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது தொடர்பாக...
அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வி. சண்முகத்துக்கு உடனடியாக ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு தமிழ்நாடு டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தல் நாளில் வீட்டின் முன்பு சகோதா்கள், மைத்துனருடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் என் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. அதில் தனது சகோதரர் மற்றும் மைத்துனர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பின்னர், தனக்கும் தனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், 2021 நவம்பரில் திடீரென பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்தது.
Advertisement
Advertisement
தற்போது, தொடர்ந்து அச்சுறுத்தல் மிரட்டல்கள் வருவதால் இதுதொடர்பாக சென்னை, விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்குகளையும், புகார்களையும் சிபிஐக்கு மாற்ற உத்தவிட வேண்டும் என சி.வி. சண்முகம் அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவையை சி.வி. சண்முகம் நிரூபித்துள்ளார். எனவே, அவருக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சி.வி. சண்முகம் தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவது தொடர்பாக வெவ்வேறு விதமான குற்றச்சாட்டுகளுடன் புகார் அளித்துள்ளதால் அதனை சிபிஐ-க்கு மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.
The High Court orders the DGP to provide armed security to AIADMK former minister C.V. Shanmugam..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.