முகப்பு
தமிழ்நாடு

அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது தவெக அரசு: ஆர்.எஸ். பாரதி

தவெக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாக திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Updated On : 4 ஜூலை 2026, 5:05 pm IST
ஆர்.எஸ். பாரதி - கோப்புப்படம்
பகிர்:

தவெக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாக திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை சந்தித்து புகார் மனு அளித்தபின் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி அளித்த பேட்டியில், குதிரை பேரம், அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரிடம் நேரடியாக விளக்கினோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டரீதியாக செல்வோம். ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி முதல்வர் முன்னிலையில் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகின்றனர்.

அமைச்சர்களை விட அதிகாரம் பொருந்தியவர்களாக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி உள்ளனர். அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றால் ஜான் ஆரோக்கியசாமி அமைச்சராகலாம் என ஆளுநர் எங்களிடம் கூறினார். விஜய்யின் தனிப்பாதுகாவலர் டிஜிபியை தள்ளிவிட்டு அருகே சென்று நிற்கிறார். திமுக ஆட்சியில் அவதூறு வழக்குகளுக்கெல்லாம் யாரையும் கைது செய்ததில்லை.

Advertisement

Advertisement

அனிதா ராதாகிருஷ்ணனை 5 மணிநேரம் போலீஸ் அதிகாரிகள் துன்புறுத்தினர். தவெகவில் சேர சொல்லி அவரை வற்புறுத்தியும் உள்ளனர். வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏவிடம் தவெக ரூ. 50 கோடி பேரம் பேசியுள்ளது. திமுக எம்எல்ஏ ஆஸ்டினையும் அமைச்சர் பதவி ஆசை காட்டி தவெகவில் சேர்க்க முயற்சி நடைபெற்றுள்ளது.

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தால் பிரசாரம் செய்ய விஜய் வருவார் என ஆஸ்டினிடம் பேரம் பேசியுள்ளனர். தவெகவுக்கு வருமாறு ஓ.எஸ். மணியனிடம் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்றார். தவெக குதிரை பேரம் செய்துவருவதாக குற்றம்சாட்டி ஆளுநர் ஆர்லேகரை சந்தித்து திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி. வில்சான் புகார் மனு அளித்தனர்.

summary

DMK Organizing Secretary RS Bharathi has accused the TVK government of indulging in abuse of power.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments