முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 5 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

Updated On : 5 ஜூலை 2026, 12:17 pm IST
பழமுதிர்சோலை குடமுழுக்கு - யூடியூப்
பகிர்:
Updated On : 5 ஜூலை 2026, 12:17 pm IST

கூடங்குளம் அணு உலையில் பழுது: 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஜெனரேட்டர் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதனால், தமிழ்நாட்டுக்கான 562 மெகாவாட் மின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 5 ஜூலை 2026, 11:59 am IST

பண்ருட்டி: டிராக்டர் மீது மினி லாரி மோதி விபத்து! 4 பேர் பலி

பண்ருட்டி அருகே ஞாயிற்றுகிழமை (ஜூலை 5) முந்திரி விறகு ஏற்றி வந்த டிராக்டர் டிப்பர் மீது மினி லாரி மோதிய விபத்தில் விவசாயக் கூலி வேலைக்குச் சென்ற 4 பேர் பலியாகினர்.

Advertisement

Advertisement

Updated On : 5 ஜூலை 2026, 11:59 am IST

நீட் வினாத்தாள் கசிவு: உண்ணாவிரம் உள்ள சோனம் வாங்சுக் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தில் உண்ணாவிரதம் உள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுகின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருகிறது.

Updated On : 5 ஜூலை 2026, 11:04 am IST

துணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு

விசிக தலைவர் திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும் என்பது எல்லா மாவட்டங்களிலும் உள்ள எதிர்பார்ப்புதான். அதற்கான காலச் சூழல் வரும்போது, கட்சியின் தலைவர்கள் பேசுவார்கள்: அமைச்சர் வன்னி அரசு

Updated On : 5 ஜூலை 2026, 10:45 am IST

18 பேர் பலி! ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமோனியா கசிந்த ஆலையில் இருந்து அமோனியா வாயுவை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி இரண்டாவது நாளாக தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜூலை 2026, 10:15 am IST

குதிரை பேரத்தை முதன்முதலில் உருவாக்கியது திமுகதான்: செங்கோட்டையன்

குதிரை பேரத்தை முதன்முதலில் உருவாக்கிய நிலை திமுகவுக்குத்தான் இருக்கிறது. எங்களுக்கு குதிரை பேரம் பேசவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், நாங்கள் (தவெக) வலிமையாக ஆட்சியமைத்திருக்கிறோம்: அமைச்சர் செங்கோட்டையன்

Updated On : 5 ஜூலை 2026, 9:55 am IST

மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!

தமிழ்நாட்டில் வீடு, வணிக நிறுவனங்களில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் மொபைல் போன் செயலியில் துல்லியமாக மீட்டர் ரீடிங் எடுக்க புதிய மொபைல் போன், சிம் கார்டு வாங்குவதற்காக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் ரூ. 10,000 வழங்கவுள்ளது.

Updated On : 5 ஜூலை 2026, 9:50 am IST

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜிநாமா தொடரும்! - பாஜக

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் உள்பட பலரின் ராஜிநாமாக்கள் தொடரும் என்று பாஜக தலைவரும் மேற்கு வங்க அமைச்சருமான திலிப் கோஷ் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) தெரிவித்தார்.

Updated On : 5 ஜூலை 2026, 8:42 am IST

வாஷிங்டனில் புயல் அபாயம்! தள்ளிப்போகிறதா டிரம்ப்பின் உரை?

வாஷிங்டனில் புயல் காரணமாக 250-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆற்றவிருந்த உரை தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On : 5 ஜூலை 2026, 8:38 am IST

பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!

முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான பழமுதிர்சோலையில் இன்று காலை வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments