முகப்பு
தமிழ்நாடு

தில்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தில்லி புறப்பட்டு சென்றார்.

Updated On : 2 மார்ச் 2026, 11:33 am IST
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தில்லி புறப்பட்டு சென்றார்.

தில்லி செல்லும் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது தொகுதிப்பங்கீடு குறித்து இருவரும் பேச உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே ஆளும் கட்சியான திமுக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. எனவே, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை எப்போதும் தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு அதன் கூட்டணி கட்சிகளிடையே நிலவுகின்றன.

Advertisement

Advertisement

முன்னதாக நேற்று மதுரையில் தேஜ கூட்டணி தலைவர்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை எனவும் கூறப்பட்டது. இருப்பினும், இதை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மறுத்தார்.

summary

AIADMK General Secretary Edappadi Palaniswami left for Delhi on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.