முகப்பு
தமிழ்நாடு

திமுகவுடன் பேரம் பேசும் கட்சி அல்ல: தொல். திருமாவளவன்

திமுகவுடன் பேரம் பேசும் கட்சி அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

Updated On : 2 மார்ச், 2026 at 11:27 AM
தொல். திருமாவளவன் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 11:27 AM

சென்னை: வரும் 2026 பேரவைத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல என்றும் திமுகவுடன் பேரம் பேசும் கட்சி அல்ல என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

வரும் 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவுபெற்ற நிலையில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Updated On : 2 மார்ச், 2026 at 11:27 AM

அவர் பேசுகையில், திமுகவுடன் பேரம் பேசும் கட்சி நாங்கல் அல்ல. நடக்கவிருப்பது வழக்கமான சராசரியான தேர்தல் அல்ல. வலதுசாரி கட்சிகளை காலூன்ற விடக்கூடாது என்பதற்கான தேர்தலாக இது நடக்கவுள்ளது. தமிழ்நாட்டைக் காப்பதற்கான தேர்தலாக உள்ளது என்றார்.

Advertisement

தமிழ்நாடு வேறு, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் வேறு. 2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவுக்கு மீண்டும் அதனை உணர்த்துவார்கள் என்று தொல். திருமாவளவன் கூறினார்.

மேலும், தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடம்கொடுத்துவிடக் கூடாது என்ற பொறுப்பிருக்கிறது. அந்த பொறுப்புணர்வோடு எங்கள் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசியிருக்கிறோம். அந்தப் புரிதலுடன் எங்களுக்கான அதிகாரப்பகிர்வு குறித்தும் திமுக குழுவினரிடம் பேசியிருக்கிறோம்.

எங்கள் கருத்துகளை மனம் திறந்து பகிர்ந்துகொண்டோம். ஒரு பொதுத் தொகுதி, இரண்டு தனித் தொகுதி என மூன்று தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளோம். தொகுதிகள் ஒதுக்கீடு உறுதியான பிறகுதான் எந்தெந்த தொகுதி என்று முடிவு செய்வோம். அதிகாரப் பகிர்வு என்பது எங்கள் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும் என்று திமுக குழுவினருடன் பேசியுள்ளோம். பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்துப் பேசவில்லை என்று கூறினார்.

தொடர்ச்சியாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தொகுதி எண்ணிக்கையைத்தான் அதிகாரப்பகிர்வு என்று சொல்கிறோம், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முதன்முதலில் முன்வைத்தது நாங்கள்தான். ஆனால், தற்போது அதற்கான காலம் கனியவில்லை என்று தொல். திருமாவளவன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.