முகப்பு
புகழேந்தி (கோப்புப்படம்)
தமிழ்நாடு

புதிய கட்சி தொடங்கினார் புகழேந்தி!

புரட்சி அதிமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கிய புகழேந்தி.

தமிழ்நாடு

புதிய கட்சி தொடங்கினார் புகழேந்தி!

புரட்சி அதிமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கிய புகழேந்தி.

Updated On : 4 மார்ச், 2026 at 2:14 PM
புகழேந்தி (கோப்புப்படம்)
பகிர்:

புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை பெங்களூரு புகழேந்தி இன்று(மார்ச் 4) தொடங்கினார்.

சசிகலாவின் ஆதரவாளராக இருந்த புகழேந்தி, பின்னர் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவில் புகழேந்தி இருந்து வந்தார்.

அண்மையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்த நிலையில், பெங்களூரு புகழேந்தி புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

முன்னதாக, ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் புதிய கட்சியை சசிகலா தொடங்கினார். அவர், அண்ணா, எம்ஜி ஆர், ஜெயலலிதா படங்களுடன் கூடிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.

அதேபோல, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் 'எம்ஜிஆர் அதிமுக' என்ற புதிய கட்சியை பிப். 19ல் தொடங்கினார்.

மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, ‘திராவிட வெற்றிக் கழகம் (திவெக)’ என்ற புதிய கட்சியை கடந்த நவம்பரில் தொடங்கினார்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராகயிருந்த பெங்களூரு புகழேந்தி புதிய கட்சியை இன்று தொடங்கினார்.

summary

Pugazhendi has started a new party!

முழு கட்டுரையைப் படிக்க →