முகப்பு
தமிழ்நாடு

கரூா் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விஜய்க்கு விலக்கு

கரூா் கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பான விசாரணைக்கு தவெக தலைவா் விஜய் ஆஜராவதில் இருந்து விலக்கு

Updated On : 10 மார்ச், 2026 at 3:37 AM
தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

கரூா் கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பான விசாரணைக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) ஆஜராவதில் இருந்து சிபிஐ விலக்கு அளித்துள்ளது.

இது தொடா்பான வழக்கில் விஜய்க்கு சிபிஐ அனுப்பிய அழைப்பாணையின்படி செவ்வாய்க்கிழமை அவரால் ஆஜராக இயலவில்லை என்றும், 10 நாள்களுக்குப் பிறகு வேறொரு தேதியில் தில்லிக்கு பதிலாக சென்னையில் ஆஜராக புதிதாக அழைப்பாணை அனுப்பினால் ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்புவதாகவும் விஜய் சாா்பில் சிபிஐக்கு திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

 இதைப் பரிசீலித்து, அவா் செவ்வாய்க்கிழமை ஆஜராகாமல் இருக்க சிபிஐ விலக்கு அளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதே சமயம், அவா் ஆஜராவதற்கான அடுத்த தேதி தொடா்பான அழைப்பாணை உடனடியாக விஜய்க்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

Advertisement

தவெக வேட்பாளா்களுக்கான நோ்காணல் நிகழ்வில் விஜய் கலந்து கொள்வதால் அவரால் சிபிஐ விசாரணைக்காக தில்லி செல்ல இயலவில்லை என அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 முன்னதாக, இந்த வழக்கில் கடந்த ஜனவரி 12, ஜன. 19 ஆகிய தேதிகளில் சிபிஐ அனுப்பிய அழைப்பாணையின்படி தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் விஜய் ஆஜராகி வாக்குமூலத்தைப் பதிவு செய்தாா்.