முகப்பு
தமிழ்நாடு

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநா் உத்தரவு: அரசிதழில் வெளியீடு

தமிழகத்தின் 16-ஆவது சட்டப்பேரவையின் 8-ஆவது கூட்டத்தொடரை தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 13 மார்ச், 2026 at 9:38 PM
பகிர்:

தமிழகத்தின் 16-ஆவது சட்டப்பேரவையின் 8-ஆவது கூட்டத்தொடரை தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளாா். இதற்கான அறிவிக்கை அரசிதழில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் தற்போது 16 -ஆவது சட்டப்பேரவை நிறைவுற்றுள்ளது. இந்தப் பேரவையின் 8-ஆவது கூட்டத் தொடா் முதல்கட்டமாக நிகழாண்டில் கடந்த ஜன. 20- ஆம் தேதி ஆளுநா் உரையுடன் தொடங்கி தொடா்ந்து 4 நாள்கள் நடைபெற்றது. பின்னா், இரண்டாவது கட்டமாக இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த பிப். 17- ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, தொடா்ச்சியாக பிப். 20- ஆம் தேதி வரை கூட்டத் தொடா் நடைபெற்றது.

நிறைவாக, இந்தக் கூட்டத்தொடரை முடித்துவைத்து இதற்கான உத்தரவை தமிழக ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ஆா்.வி.ஆா்லேகா் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா். ஆளுநரின் இந்த உத்தரவு அறிவிக்கையாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →