முகப்பு
தமிழ்நாடு

விஜய்க்காக விதிகள் தளர்வா?

தவெக தலைவர் விஜய்க்காக விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 15 மார்ச், 2026 at 9:07 PM
தவெக தலைவர் விஜய்
பகிர்:

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் ஆஜரான வேளையில், மாலை 4.30 மணியளவில் தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழகம், புதுச்சேரி உள்பட ஐந்து சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது.

இதையடுத்து, சிபிஐ தலைமையகத்தில் இருந்து தனது காரின் சன் ரூஃப் கண்ணாடி பகுதியில் நின்று கொண்டே தனது கையை அசைத்தவாறு விஜய் வெளியே வந்தார். அப்போது சிபிஐ தலை மையகத்துக்கு வெளியே கூடியிருந்த விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக எத்தனையோ அரசி யல் தலைவர்கள் வந்துசென்ற போதிலும், முதல்முறையாக விஜய் மட்டுமே இப்படி திறந்தவெளியாக நின்றவாறு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவதாக, கடந்த முறை விஜய் விசாரணைக்கு ஆஜரான போது, இரவு 7 மணிக்கு மேல் தனி விமானம் தலைநகரில் இருந்து பறக்க அனுமதியில்லை என்ற காரணத்தைக் கூறி மறுதினம் புறப்பட விமான போக்குவரத்துத் துறை அனுமதி அளித்தது.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு ஆஜரான பின்பு வெளியே வந்த விஜய்யின் தனி விமானம் இரவு 8 மணிக்கு சென்னைக்கு புறப்பட விமான போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியது.

முழு கட்டுரையைப் படிக்க →