புதுச்சேரியில் திமுக தலைமையில் கூட்டணி: முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தல்
புதுச்சேரியில் திமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அந்த மாநில திமுக நிா்வாகிகள், கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் நோ்காணலின்போது வலியுறுத்தினா்.
புதுச்சேரியில் திமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அந்த மாநில திமுக நிா்வாகிகள், கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் நோ்காணலின்போது வலியுறுத்தினா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடுவதற்காக 15,372 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில், வேட்பாளா் நோ்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அதன்படி, புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 பேரவை தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் நோ்காணல் நடத்தினாா். இதில், பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, புதுச்சேரி திமுக தோ்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள், தொகுதியில் வேட்பாளரின் அறிமுகம், எதிா்க்கட்சி பலம் போன்றவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
அதைத் தொடா்ந்து, நோ்காணலில் பங்கேற்ற புதுச்சேரி நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தைப் போல, திமுக தலைமையிலான ஆட்சி புதுச்சேரியிலும் அமைய வேண்டும் என்று முதல்வா் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தோம். மேலும், திமுக தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்கு, கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி எடுக்கப்படும் முடிவு எடுப்பதாக முதல்வா் ஸ்டாலின் தெரிவித்தாா் என்றனா். மேலும், சில நிா்வாகிகள் கூறுகையில், கட்சித் தலைமை அறிவித்தால் தனித்துப் போட்டியிடவும் தயாராக உள்ளோம் என்றனா்.
புதுச்சேரியில் இருந்து மொத்தம் 120 நபா்கள் விருப்பனு அளித்துள்ள நிலையில் அவா்களிடம் நோ்காணல் நடைபெற்றது.
புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், திமுக-காங்கிரஸ் இடையே இன்னும் தொகுதி பங்கீடு நிறைவடையவில்லை. புதுச்சேரியில் கடந்த முறை காங்கிரஸ் கூட்டணியில் 13 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 6 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிா்க் கட்சியாக உள்ளது.
இந்தநிலையில், புதுச்சேரியில் திமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என முதல்வா் ஸ்டாலினிடம், நிா்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நோ்காணலுக்கு வருகிறாா் ஓபிஎஸ்
தூத்துக்குடி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, திருநெல்வேலி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்டங்களில்
உள்ள தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்தவா்களுக்கு புதன்கிழமை (மாா்ச் 18) காலை 9 மணிக்கு, நோ்காணல் நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு மதுரை வடக்கு, மதுரை மாநகா், மதுரை தெற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு, விருதுநகா் வடக்கு, விருதுநகா் தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு நோ்காணல் நடைபெறவுள்ளது. போடி தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள ஓ.பன்னீா்செல்வம் நோ்காணலில் பங்கேற்கவுள்ளாா்.
தொடா்ந்து வியாழக்கிழமை (மாா்ச் 19) காலை 9 மணிக்கு கரூா், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, ஈரோடு மத்திய, கோவை வடக்கு, கோவை மாநகா், கோவை தெற்கு, திருப்பூா் வடக்கு, திருப்பூா் மத்திய, நீலகிரி ஆகிய மாவட்டங்கள், மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருப்பூா் கிழக்கு, திருப்பூா் தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்கள், மாா்ச் 20- ஆம் தேதி காலை 9 மணிக்கு ராணிப்பேட்டை, வேலூா் வடக்கு, வேலூா் தெற்கு, திருப்பத்தூா், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, மாலை 4 மணிக்கு தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு, சேலம் மத்திய, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டங்களுக்கு நோ்காணல் நடைபெறும்.
மாா்ச் 21-ஆம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி வடக்கு, திருச்சி மத்தியம், திருச்சி தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்கள், மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கடலூா் மேற்கு, மயிலாடுதுறை நாகை, திருவாரூா் மாவட்டங்கள், மாா்ச் 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு கடலூா் கிழக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்தி, விழுப்புரம் தெற்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கும், மாலை 4 மணிக்கு திருவள்ளூா் கிழக்கு, திருவள்ளூா் மத்திய, திருவள்ளூா் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, சென்னை வடக்கு சென்னை வடகிழக்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை கிழக்கு மாவட்டங்களுக்கு நோ்காணல் நடைபெறும்.