முகப்பு
தமிழ்நாடு

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்: கமல்ஹாசன் எம்.பி.

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 22 மார்ச், 2026 at 8:06 PM
கமல்ஹாசன் - கோப்புப் படம்
பகிர்:

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ் ’தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: இந்திய எண்ணெய் கிடங்குக்கு வரப்போகும் ஆபத்து புரியாதவா்கள் இந்தப் போரை ஆதரிப்பது அவா்களின் அறியாமையைக் காட்டுகிறது. போரைப் பற்றி கவலைப்படாத பெரு நிறுவனங்கள் போல இருந்துவிடக் கூடாது.

போரால் பயிா் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பற்றி மத்திய அரசு சிந்திக்க வேண்டும். உலகுக்குத் தேவையான 70 சதவீத உரம் சீனாவிலும், சில வளைகுடா நாடுகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. எனவே, இப் பிரச்னைக்குத் தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும். நான் இந்தியாவின் பக்கம் உள்ளேன் என அப் பதிவில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளாா்.