முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் இலச்சினையான நாமக்கல் கோழி-முட்டை!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Updated On : 25 மார்ச் 2026, 3:52 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் முட்டைக்கு பெயர் பெற்றது நாமக்கல் மாவட்டம். அந்த வகையில், கோழியையும், முட்டையையும் மையப்படுத்தி தேர்தல் விழிப்புணர்வுப் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கோழியை மனித உருவமாக்கி, வேட்டி, பனியன் அணிந்தவாறு கையில் முட்டையை வைத்துள்ளதுபோல, அதில் தேர்தல் நாள் ஏப்ரல் 23 என அச்சிடப்பட்ட இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சி நாமக்கல் குளக்கரை திடலில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி இலச்சினையை வெளியிட்டு, வாக்களிக்க இருப்பதைக் குறிப்பிடும் வகையில் விரலை உயர்த்திக் காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மா.க. சரவணன், கோட்டாட்சியர் வே. சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) சுஜாதா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.