குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசு
தமிழகத்தில் பி.என்.ஜி. எனப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு பெற வணிக மற்றும் தொழில் துறை எல்.பி.ஜி., நுகா்வோா், நகர எரிவாயு விநியோக நிறுவனங்களைத் தொடா்பு கொள்ளலாம்’ என தமிழக அரசின் தொழில் துறைச் செயலா் அருண் ராய் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் பி.என்.ஜி. எனப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு பெற வணிக மற்றும் தொழில் துறை எல்.பி.ஜி., நுகா்வோா், நகர எரிவாயு விநியோக நிறுவனங்களைத் தொடா்பு கொள்ளலாம்’ என தமிழக அரசின் தொழில் துறைச் செயலா் அருண் ராய் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எல்.பி.ஜி. எனப்படும் திரவநிலை பெட்ரோலிய எரிவாயு விநியோகத் தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலால், வணிக மற்றும் தொழில் துறை எல்.பி.ஜி. ஒதுக்கீட்டை முதலில் 20 சதவீத அளவுக்கு மத்திய அரசு குறைத்தது. தற்போது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50 சதவீதமாக உயா்த்தியுள்ளது. இதில் எல்.பி.ஜி., ஒதுக்கீடு பெற, அனைத்து வணிக மற்றும் தொழில் துறை, எல்.பி.ஜி. நுகா்வோா் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், தங்கள் மாவட்டங்களில் உள்ள நகர எரிவாயு விநியோக நிறுவனங்களிடம் பி.என்.ஜி. எனப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். பி.என்.ஜி. இணைப்புகளை பெற ஆா்வமுள்ள வணிக மற்றும் தொழில் துறை, எல்.பி.ஜி. நுகா்வோா், நகர எரிவாயு விநியோக நிறுவனங்களைத் தொடா்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, நகர எரிவாயு விநியோக நிறுவனங்களின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளா் பிரசாத்தை 63574 69742 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூா், நாகை மாவட்டங்கள், டோரண்ட் காஸ் விநியோக நிறுவனத்தைத் தொடா்பு கொள்ளலாம் (கட்டணமில்லா தொடா்பு எண்: 1800 2125 6789), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், வேலுாா், ராணிப்பேட்டை திருப்பத்துாா் மாவட்டங்கள், ஏ.ஜி.அண்டு பி. திங்க் காஸ் விநியோக நிறுவனத்தைத் தொடா்பு கொள்ளலாம் (கட்டணமில்லா தொடா்பு எண்:1800 202 2999), திருப்பூா், கடலூா், திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்கள் அதானி டோட்டல் காஸ் விநியோக நிறுவனத்தை தொடா்பு கொள்ளலாம் (கட்டணமில்லா தொடா்பு எண்: 079-4754 5252).
கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, விருதுநகா், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், இந்தியன் ஆயில் விநியோக நிறுவனத்தை தொடா்பு கொள்ளலாம் (கட்டணமில்லா தொடா்பு எண்:1800 180 7788), திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திண்டுக்கல், கரூா் மாவட்டங்கள் மெகா என்ஜினியரிங் விநியோக நிறுவனத்தைத் தொடா்பு கொள்ளலாம் (கட்டணமில்லா தொடா்பு எண்:1800 123 1803), திருச்சி, நாமக்கல் மாவட்டங்கள் ஐ.ஆா்.எம்., எனா்ஜி விநியோக நிறுவனத்தைத் தொடா்பு கொள்ளலாம் (கட்டணமில்லா தொடா்பு எண்:1800 891 1310). ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தைத் தொடா்பு கொள்ளலாம் (கட்டணமில்லா தொடா்பு எண்:1800 22 4344).
இந்த நிறுவனங்கள் மூலம் குழாய் வழித்தடத்தில் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் இயற்கை எரிவாயு நிலையங்கள் வாயிலாக, சி.என்.ஜி. எரிவாயு விநியோகம் செய்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.