முகப்பு
தமிழ்நாடு

பெரம்பூர் தொகுதியில் ஆர்.டி. சேகர் மீண்டும் போட்டி

பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி. சேகர் மீண்டும் போட்டியிடுகிறார்.

Updated On : 28 மார்ச், 2026 at 11:41 AM
ஆர்.டி. சேகர்.
பகிர்:

பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி. சேகர் மீண்டும் போட்டியிடுகிறார்.

பெரம்பூர் தொகுதியில் தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிடுவார் என கடந்த சில நாள்களாக சொல்லப்பட்டு வருகிறது. வரும் 30ஆம் தேதி விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வடசென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதி முன்எப்போதும் இல்லாத வகையில் கவனம் பெற்றுள்ளது.

அதேசமயம், என்.டி.ஏ. கூட்டணியில் பாமகவிற்கு தற்போது அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் போட்டியிட போவதாக கூறப்படும் பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி. சேகர் மீண்டும் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தோ்தலில் களம் காண்கின்றன. இதனிடையே 164 பேர் அடங்கிய திமுக வேட்பாளர்களின் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டார்.

அதில், முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

summary

R.D. Shekhar is contesting again from the DMK constituency in Perambur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.