வாக்களித்தவர்களுக்கு நன்றி; விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துகள் : சீமான்
விஜய் தலைமையிலான அரசுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
''அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
Advertisement
வெற்றிபெற்ற அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்'' என சீமான் பதிவிட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலில் போட்டியிட்ட சீமான், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும், அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் தொகையையும் தக்கவைக்கவில்லை.
Thanks to those who voted; congratulations to the government led by Vijay Seeman
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.