சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை!
சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பது பற்றி...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், அமைச்சருமான காளிமுத்துவின் மகள் கயல்விழியை சீமான் திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
Advertisement
Advertisement
வழக்கறிஞரான கயல்விழி, அரசியலில் இருந்து விலகியிருந்த நிலையில், சமீபகாலமாக சீமானுடன் பிரசாரங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில், சீமான் - கயல்விழி தம்பதிக்கு வியாழக்கிழமை காலை இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடியில் போட்டியிட்ட சீமான் உள்பட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 234 பேரும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Seeman and Kayalvizhi Welcome a Baby Girl
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.