ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!
தமிழ்நாடு ஆளுநருக்கு தவெக கடிதம் எழுதியுள்ளது தொடர்பாக....
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் தவெக வென்றுள்ள நிலையில், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
திராவிடக் கட்சி பாரம்பரியம் அல்லாத தவெக தனித்துப் போட்டியிட்டு பலம் வாய்ந்த திமுக, அதிமுக கூட்டணிகளை வென்று தமிழக அரசியலில் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.
Advertisement
இந்த நிலையில், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக சார்பில் மின்னஞ்சலில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் எனவும் அந்தக் கடிதத்தில் தவெக தெரிவித்துள்ளது.