முகப்பு
தமிழ்நாடு

விஜய்யுடன் தலைமைச் செயலர், டிஜிபி ஆலோசனை!

சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் விஜய்யை மரியாதை நிமித்தமாக தலைமைச் செயலர், டிஜிபி சந்தித்தது குறித்து...

ஆளுநர் மாளிகையில் விஜய்யை வரவேற்கும் அதிகாரிகள் - மாதிரிப் படம்
பகிர்:

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடன் தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (மே 6) ஆலோசனை மேற்கொண்டனர்.

சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

தமிழகத்தின் 17 வது அமைச்சரவையின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை (மே 7) பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அது குறித்து இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு விஜய் உரிமை கோரினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் மற்ற கட்சிகளிடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளதால், தவெகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 112 ஆக உயந்துள்ளது.

எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 6 உறுப்பினர்கள் தேவைப்படுகிறது.

summary

Chief Secretary and DGP Hold Consultations with Vijay!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments