முகப்பு
தமிழ்நாடு

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை: டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்!

புதிய டிஜிபி மகேஷ்குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது..

Updated On : 3 ஜூன் 2026, 1:22 pm IST
டிஜிபி மகேஷ்குமார் - x.com
பகிர்:

தமிழ்நாட்டின் 34-வது சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். டிஜிபி அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்டு அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

டிஜிபியாக பொறுப்பேற்ற மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தமிழ்நாட்டு மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி. மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

சைபர் குற்றங்களைத் தடுக்கவும் முயற்சிகள் எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Mahesh Kumar Agarwal assumed office today as Tamil Nadu's 34th Director General of Police (Law and Order).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.