திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்!
திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி உயிரிழந்தது பற்றி...
திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே அந்த மாநிலத்தின் காவல்துறை தலைவர் அனுராக் தன்கர் உயிரிழந்த நிலையில் திங்கள்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.
சக காவலர்கள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட தகவலில், “இன்று பகல் 12 மணியளவில் டிஜிபி அனுராக் தன்கர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். வரும்போதே நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் அல்லது உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. சிபிஆர் சிகிச்சை மூலம் 40 நிமிடங்களுக்கும் மேலாக முயற்சித்தும் அவரை மீட்க முடியவில்லை. இறுதியில் 12:48 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை மூலம் அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவுடன் மாநில முதல்வர் மாணிக் சாஹா, தலைமைச் செயலர் ஜே.கே. சின்ஹா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தனர்.
அவரின் மரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக என்டிடிவியும், தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக இந்தியா டூடேவும் முதல்கட்டத் தகவலின் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கடந்த மே 2025 முதல் திரிபுரா மாநிலத்தின் டிஜிபியாக அனுராக் தன்கர் பணியாற்றி வருகிறார். முன்னதாக, மத்திய புலனாய்வுத் துறையில் (சிபிஐ) பணியாற்றிய அவர், பல முக்கிய வழக்குகளை கையாண்டுள்ளார்.
சிறப்பான பணிகளுக்காக குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்களை இருமுறை பெற்றுள்ளார்.
Tripura DGP found dead under mysterious circumstances inside the DGP's office
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.