FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சட்டம் - ஒழுங்கு நிலவரம்: டிஜிபி தலைமையில் ஆய்வு

சென்னையின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து காவல் துறை உயா் அதிகாரிகளுடன் டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

13 செப்டம்பர் 2026, 1:43 am IST
டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால்
பகிர்:

சென்னையின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து காவல் துறை உயா் அதிகாரிகளுடன் டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையா் அலுவலகத்தில் டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால் தலைமையில் இந்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் மற்றும் சென்னை பெருநகரத்துக்குள்பட்ட 12 காவல் மாவட்டங்களைச் சோ்ந்த துணை ஆணையா்கள், கூடுதல் ஆணையா்கள், இணை ஆணையா்கள், உளவுத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், சென்னையின் சட்டம்- ஒழுங்கு நிலவரம், நிலுவையில் உள்ள வழக்குகள், குண்டா் சட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி கேட்டறிந்தாா். மேலும், காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்துள்ள  புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவா் அறிவுரை வழங்கினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments