சட்டம் - ஒழுங்கு பாதுகாப்புக்காக தவெக ஆட்சியில் யார் மீதும் வழக்கு போடமாட்டீர்களா? எ.வ. வேலு
திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து பற்றிய முதல்வரின் அறிவிப்புக்கு எ.வ. வேலு பதில்...
ஜனநாயக உரிமைகளுக்காக போராடிய ஆசிரியர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார்.
இதுதொடர்பாக திமுக சார்பில் எ.வ. வேலு பேசுகையில்,
"விவசாயிகள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் என்பது இதுவரை 110 விதியின் கீழ் அறிவிக்கடப்படாத ஒன்று. 'முந்தைய அரசு' என்று கூறும்போது உள்நோக்கத்துடன் இருக்கிறது. அது விவாதமாகிறது.
Advertisement
Advertisement
வழக்கு போடவில்லை என்று சொல்கிறார்களா? உண்மைக்கு மாறான தகவல் என்று சொன்னால் நீங்கள் சொல்லுங்கள்.
சட்டம் - ஒழுங்கு பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுப்பது காலம்காலமாக இருப்பதுதான்.
இப்போது நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள். இனி காவல்துறை வைத்து யார் மீதும் வழக்கு போடமாட்டீர்களா?
முன்னாள் முதல்வருக்கு ஒரு ஆசிரியர், விவசாயியை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
சட்டம் - ஒழுங்கு பாதுகாப்புக்காகவே ஒரு வழக்கு போட வேண்டிய அவசியமாகிறது. அதைவிட வேறு என்ன இருக்க முடியும்?
இந்த ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு குறித்து கவலையில்லையா? சிப்காட்டில் இடம் எடுக்க மாட்டீர்களா? யார் மீது வழக்கு போட மாட்டீர்களா?" என்றார்.
110 விதிக்கு புறம்பாக எதுவும் நடைபெறவில்லை, 110 விதியின் கீழ் முதல்வர் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடலாம் என்று பேரவைத் தலைவர் தெரிவித்தார்.
Will you not file cases against anyone in TVK govt: E.V. Velu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.