கடினமான நேரத்தில் ஒருவரைக் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல! அகிலேஷ் பதிவு
காங்கிரஸை மறைமுகமாக விமர்சித்த அகிலேஷ்....
காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்து சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.
தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த திரிணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும், திமுக தமிழ்நாட்டிலும் ஆட்சியை இழந்துள்ளன.
இதனிடையே, நேற்று கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொண்ட அகிலேஷ் யாதவ், மமதா பானர்ஜியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மமதா பானர்ஜி மற்றும் மு.க. ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அகிலேஷ் யாதவ், “கடினமான நேரத்தில் ஒருவரைக் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.
அவரின் பதிவு, தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பின்பு திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக கூட்டணியில் இணைந்த காங்கிரஸை மறைமுகமாக விமர்சிப்பது போன்று அமைந்துள்ளது.
We are not the kind of people who abandon someone during difficult times! — Akhilesh yadav
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.