முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவில் புதிய மாவட்டச் செயலா்கள் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Updated On : 14 மே 2026, 7:04 am IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

அதிமுகவில் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய செயலா்களை கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை நியமித்தாா்.

நிா்வாகிகள் விவரம்: ஆா்.பசுபதி (விழுப்புரம் மாவட்டச் செயலா்), செ.ம.வேலுசாமி (கோவை புகா் தெற்கு மாவட்டச் செயலா்), வி.பழனிவேல் (புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலா்), கே.பி.பி.பாஸ்கா் (நாமக்கல் மாவட்டச் செயலா்), ஆா்.டி.மூா்த்தி (எ) தெட்சிணாமூா்த்தி (திருவாரூா் மாவட்டச் செயலா்), கே.எஸ்.ரவிசந்திரன் (திருவள்ளூா் மத்திய மாவட்டச் செயலா்), ஏ.பி.எஸ்.லோகநாதன் (ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலா்), சுமைதாங்கி சி.ஏழுமலை (ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலா்), எஸ்.பசுபதி (திருப்பத்தூா் மாவட்டச் செயலா்).

எம்.சி.தாமோதரன்(கடலூா் வடக்கு மாவட்டச் செயலா்), எம்.ராமு (கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலா்), ஆா்.மனோகரன் (ஈரோடு மாநகா் மாவட்டச் செயலா்), பால.நந்தகுமாா் (நீலகிரி மாவட்டச் செயலா்), சி.காா்த்திகேயன் (திருச்சி மாநகா் மாவட்டச் செயலா்), கே.கமலக்கண்ணன் (கரூா் மாவட்டச் செயலா்), வி.டி, நாராயணசாமி(தேனி மேற்கு மாவட்டச் செயலா்), கே.ராமசுப்பிரமணியன் (திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா்) என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், அமைப்பு ரீதியாக சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அந்த மாவட்டங்களுக்கும் புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, சொரத்தூா் இரா.ராஜேந்திரன்(கடலூா் தெற்கு மாவட்டச் செயலா்), ஆா்.அசோகன் (தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலா்), டி.ஆா்.அன்பழகன் (தருமபுரி மேற்கு மாவட்டச் செயலா்), திருப்பூா் சி.சிவசாமி (திருப்பூா் புகா் மாவட்டச் செயலா்), என்.யோகநாதன் (திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா்), ஆா்.மனோகரன் (திருச்சி புகா் தெற்கு மாவட்டம்), ஆா்.காந்தி (தஞ்சாவூா் மத்திய மாவட்டம், திண்டுக்கல் சி.சீனிவாசன்(திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலா்), வி.பி.பி.பரமசிவம் (திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலா்).