முகப்பு
தமிழ்நாடு

பொய்கை மேம்பாலத்தில் தனியார் பேருந்து தீப்பிடிப்பு!

பொய்கை மேம்பாலத்தில திடீரென பேருந்து தீப்பிடித்தது பற்றி..

தீப்பிடித்த பேருந்து - video crop
பகிர்:

கோயம்புத்தூரிலிருந்து வேலூருக்கு பழைய பொருள்கள் கடைக்கு கொண்டுவரப்பட்ட ஏசி தனியார் பேருந்து பொய்கை மேம்பாலத்தில திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூரிலிருந்து வேலூருக்கு ஸ்கிராப்க்கு கொண்டுவரப்பட்ட ஏசி தனியார் பேருந்து வேலூர் மாவட்டம் பொய்கை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. அவ்வழியாக வந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்ததினால் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்ததால் உடனடியாக அவ்வழியாக வரக்கூடிய வாகனங்களை சர்வீஸ் சாலையில் திருப்பிவிட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Advertisement

இந்த தீ விபத்தால் எந்த விதமான அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. மேம்பாலத்தில் திடீரென தனியார் பேருந்து தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியில் புகை மூட்டமாகக் காட்சியளிக்கப்பட்டுப் பரபரப்பு ஏற்பட்டது.

summary

A stir was created when a private AC bus—which had been transported from Coimbatore to Vellore for sale at a scrap yard—suddenly caught fire and burned on the Poigai flyover.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.