சென்னை வேலப்பன்சாவடியில் தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து
சென்னை வேலப்பன்சாவடியில் தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் தீ விபத்து குறித்து...
சென்னை வேலப்பன்சாவடியில் தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.
சென்னை மதுரவாயல் அடுத்த வேலப்பன்சாவடியில் தனியார் பெயிண்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் தீ மளமளவென பரவியது. இதனால் அங்கு தொழிற்சாலையில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து தீ கட்டம் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் வேலப்பன்சாவடி பகுதியில் புகைமண்டலம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல், பூந்தமல்லி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
Regarding the sudden fire that broke out at a private paint factory in Velappanchavadi, Chennai...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.