இரு ஆண்டு தோட்டக்கலை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையத்தில் இரு ஆண்டு தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்
சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையத்தில் இரு ஆண்டு தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையின் மூலம் சென்னை, மாதவரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டுக்கான ஆங்கில வழி ஈராண்டு தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
Advertisement
தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இணைப்பு கல்லூரி ஆகும்.
இந்த நிலையத்தில் உள்ள 50 இடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக இணையதளத்தின் மூலம் (ட்ற்ற்ல்:://ற்ய்ஹன்.ன்ஸ்ரீஹய்ஹல்ல்ப்ஹ்.ஸ்ரீா்ம்) ஜூன் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பிளஸ் 2 -வில் தாவரவியல், விலங்கியல், கணிதம், உயிரியல் அல்லது வேளாண் தொழிற்கல்விப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் சோ்க்க நடைபெறும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100, இதர பிரிவினருக்கு ரூ.200. விவரங்களுக்கு 99442 09417, 84897 42975 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.