முகப்பு
தமிழ்நாடு

தமிழக முதல்வருடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவனங்களின் தலைவர்கள் சந்திப்பு!

முதல்வர் விஜய்யை முன்னணி வாகன நிறுவனங்களின் தலைவர்கள் சந்தித்துள்ளது குறித்து...

தமிழக முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ நிறுவன மேலாண்மை இயக்குநர் தாமஸ் டோஸ்... - CMOTamilnadu
பகிர்:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களின் தலைவர்கள் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (மே 14) அன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாமஸ் டோஸ், டாஃபே நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மல்லிகா சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் லட்சுமி வேணு உள்ளிட்டோர் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

இத்துடன், யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் ஜிம் ஆட்டா, பெருநிறுவன இயக்குநர் அட்சுஷி நாகாஷிமா மற்றும் துணைத் தலைவர் குமார் ஆகியோரும் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளனர்.

முதல்வர் விஜய் உடனான நாட்டின் முன்னணி நிறுவன தலைவர்களின் இந்தச் சந்திப்பில், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி குறித்த விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்நிறுவனங்களின் முதலீடு மற்றும் மாநில வளர்ச்சிக்காக அவர்களின் பங்களிப்புகளுக்கு தமிழக அரசு முழு ஆதரவளிக்கும் என முதல்வர் விஜய் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Leaders of India's leading automotive companies have personally met CM Joseph Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments