முகப்பு
தமிழ்நாடு

அமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் தனிச் செயலர் செந்தில் குமார் சந்திப்பு!

ஆளுநர் மாளிகை வந்தார் முதல்வரின் தனிச் செயலர் செந்தில் குமார்

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகர் - EPS
பகிர்:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார், இன்று ஆளுநர் மாளிகைக்கு வந்து, ஆளுநர் ஆர்லேகரை சந்தித்துப் பேசி வருகிறார்.

ஆளுநரிடம் அமைச்சர்களுக்கான துறைகள் பட்டியல் மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கோப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய்யுடன் பதவியேற்றுக் கொண்ட ஒன்பது அமைச்சர்களுக்கும் இதுவரை துறைகள் ஒதுக்கப்படாத நிலையில், முதல்வரின் தனிச் செயலர் இன்று ஆளுநரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் கேரளம் சென்றிருந்த நிலையில், நேற்று மாலை அவர் சென்னை திரும்பியிருந்தார்.

மே 4ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மே 10ஆம் தேதி தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்து 6 நாள்களாகியும் அவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டால்தான், தற்போது நிலுவையில் உள்ள பல்வேறு துறை பணிகள் தொடங்கும். அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தால் பல துறைப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், முதல்வரின் தனிச் செயலர் செந்தில்குமார், ஆளுநரை சந்தித்துள்ளார். அவரிடம், அமைச்சர்களுக்கான துறைகள் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான தகவல்களும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

summary

Chief Minister's Private Secretary Senthil Kumar arrives at the Governor's Mansion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments