முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!
முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளது குறித்து..
தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்யின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வா் சி.ஜோசப் விஜய் நடிகராக இருந்த காலத்தில் ஜெகதீஸ் பழனிசாமி அவருக்கு மேலாளராக பணியாற்றி வந்தாா். தவெக தேர்தல் வியூகம், வார் ரூம் பணிகளை மேற்கொண்ட ரூட் அமைப்பின் நிறுவனரான ஜெகதீஷ் பழனிசாமியை, முதல்வரின் தனிச் செயலராக நியமித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, முதல்வரின் பிறந்தநாளையொட்டி, ஜெகதீஷ் சமூக வலைதளப்பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு, உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன், ஒரு தீவிர ரசிகனாக வரிசையில் நின்றிருந்தேன். இன்று, அதே நான் மாநிலத்தின் முதல்வரின் தனிச் செயலராக உங்கள் அருகில் நிற்கிறேன். வாழ்க்கை முழு வட்டம். சுற்றி மீண்டும் அதே இடத்துக்கு வந்ததுபோல் உணா்கிறேன்.
Advertisement
Advertisement
கடினமான நாள்களில் இன்னும் வேகமாக ஓடவும், மேலும் உயரங்களை அடையவும் நீங்கள் எனக்குத் தந்த உற்சாகமும் ஆற்றலும் வாா்த்தைகளால் விவரிக்க முடியாதவை.என் வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்துக்கும், தொடா்ந்து ஊக்கமளித்து வருவதற்கும் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் எனப் பதிவிட்டுள்ளாா்.
Jagadeesh Palanisamy appointed as the Chief Minister's Personal Secretary
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.