ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையம் வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் விஜய் ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள விஜய்யின் ஆட்சி குறித்து தற்போது ஏதும் கூற முடியாது.
6 மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். புதியவர்களை குறைவாக எடை போடக்கூடாது. அதிகமும் எதிர்பார்க்கக்கூடாது. எனக்கும் ரஜினிக்கும் இடையே போட்டி உள்ளது. ஆனால் ஒருபோதும் பொறாமை இருந்ததில்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
முன்னதாக சென்னை - போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ஒருவேளை கமல்ஹாசன் முதல்வர் ஆகியிருந்தால் எனக்கு அந்த பொறாமை வந்திருக்குமா என்று கூட தெரியாது.
அப்போதும் எனக்கு பொறாமை வந்திருக்காது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Makkal Needhi Maiam President Kamal Haasan has stated that it is a competition with Rajini, not jealousy.