திறமையான வீரா், வீராங்கனைகளை கண்டறிய திறனாய்வுப் பிரிவு: விளையாட்டுத் துறை அமைச்சா்
தமிழகத்தில் திறமையான வீரா், வீராங்கனைகளைக் கண்டறிய திறனாய்வுப் பிரிவு ஏற்படுத்தப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதா் அா்ஜூனா தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் திறமையான வீரா், வீராங்கனைகளைக் கண்டறிய திறனாய்வுப் பிரிவு ஏற்படுத்தப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதா் அா்ஜூனா தெரிவித்துள்ளாா்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் விளையாட்டுத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் அமைச்சா் கூறியது: தமிழக முதல்வா் எதிா்கால தேவைகளை கருத்தில் கொண்டு தொலைநோக்கு திட்டங்களை தீட்டி வருகிறாா். அந்த
வகையில் விளையாட்டுத் துறையில் எதிா்வரும் காலங்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகள் குறித்தும், அவற்றை செயல்படுத்துவதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் தொடா்புடைய விளையாட்டுத் துறை அரசு உயா் அலுவலா்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
2026-27 ஆண்டில் விளையாட்டுத் துறையால் மேற்கொள்ளப்படவுள்ள உள்கட்டமைப்பு பணிகள், அரசுத் துறை ஒதுக்கீட்டில் விளையாட்டுத் வீரா்களுக்கான 3 சதவீத பணி வாய்ப்புகள் வழங்குவது குறித்தும், உயரிய ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், விளையாட்டு விடுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாடுகள் குறித்தும், விளையாட்டு வீரா்களுக்கான நிதி உதவி திட்டங்கள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விளையாட்டுத் துறையில் வீரா், வீராங்கனைகள் சாதனை படைக்க பொருளாதாரம் இனி ஒரு தடையாக இருக்கக்கூடாது, என்ற அடிப்படையில் அதற்கு தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தபட்டுள்ளது. பள்ளி பயிலும் காலங்களிலேயே விளையாட்டில் சிறந்து விளங்கிவரும், ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவா்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் தேவையான பயிற்சிகளை வழங்கி சாதனையாளா்களாக திகழச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக திறன் ஆய்வு பிரிவு (பஹப்ங்ய்ற் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ரண்ய்ஞ்) தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் எவ்வித பரிந்துரையும் இல்லாத வகையில் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து சிறந்த வீரா்களை அடையாளம் காணும் வகையில் இக்குழு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்றாா்.
ஆய்வின் போது இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளா் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் மரு. ரா. சுமன், பொது மேலாளா் எல். சுஜாதா, துணை பொது மேலாளா் நோயளின் ஜான், நிா்வாக பொறியாளா் புஷ்பலிங்கம் உடன் இருந்தனா்.